Skip to main content

வழிதவறி நின்ற மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ரோட்டில் வீச்சு:காஞ்சியில் பரபரப்பு

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

காஞ்சிபுரத்தில் வழிதவறி நின்ற 15 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ரோட்டில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

sexual abuse

 

மனநலம் பாதிக்கப்பட்ட தனது 15 வயது மகளை காணவில்லை என காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி காவல்நிலையத்தில் ஒரு தம்பதியினர் புகார் கொடுக்க, அது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது காந்திபுரம் ரோட்டில் சிறுமி ஒருவர் உடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் காயங்களுடன் கிடப்பதை கண்ட போலீசார் அந்த சிறுமியை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பின் அந்த சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், வீட்டில் தந்தை திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறியதும் தெரிவந்தது.

 

மேலும் இந்த வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், வீட்டை விட்டு வெளிய வந்த அந்த சிறுமி அழுதபடியே வரதராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லவேண்டும் என அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுனரான ராஜாவிடம் கூறியுள்ளார். சிறுமி அழுதுகொண்டே வருவதை கண்ட அவனும் அந்த சிறுமியிடம் அக்கறையுடன் விசாரிப்பதை போல விசாரித்து உதவி செய்வதாக ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்று ஒருவீட்டில் அடைத்து வைத்து அந்த சிறுமிக்கு மயக்கமருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளான்.

 

mm

 

அதனையடுத்து ஆட்டோ ஓட்டுநர் ராஜா அவனது நண்பர்களான தினேஷ், தேவா என இருவரை தொலைபேசியில் அழைத்து வரவழைத்து அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் மயக்க நிலையில் இருந்த சிறுமியை காந்திரோட்டில் எறிந்துவிட்டு சென்றது அந்த கும்பல்.

 

தற்போது ஆட்டோ ஓட்டுநர் ராஜா, தேவா ஆகியோரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ள விஷ்ணு காஞ்சி போலீசார் தினேஷ் என்ற நபரையும் மேலும் இந்த வழக்கில் அரவிந்த்,தீபக் என்ற இருவரையும்  தேடிவருகின்றனர்.

 

அண்மையில் கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் காஞ்சியில் வழிதவறி சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்திருப்பது அங்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்