பாலியல் தொந்தரவுக்கு எதிராக என்னதான் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும் வக்கிரபுத்தி கொண்ட அயோக்கியர்கள் அதை தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இதனால் தினமும் காவல்நிலையங்களில் பாலியல் புகார்கள் வந்த வண்ணமாகதான் உள்ளன.

குமரி மாவட்டம் இரணியல் அருகே புதுவிளையை சேர்ந்த சசிகுமார் கேரளாவில் கொத்தனார் வேலை செய்து வருகிறான். இவருடைய மனைவி வெளிநாட்டில் வேலை செய்துவந்த நிலையில் சசிகுமாரின் நடத்தையால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

sexual abuse incident in kumari district

Advertisment

Advertisment

இந்தநிலையில் அதேபகுதியை சேர்ந்த சாந்தா என்பவருடன் சசிகுமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. சாந்தாவின் கணவர் இறந்ததால் தனது 13 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். இதனால் வறுமை சாந்தாவையும் அவளின் மகளையும் துரத்தியது. மகள் இரணியலில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்தநிலையில் சந்தாவுக்கு சசிகுமார் பணம் உதவி செய்து வந்ததால் இருவரும் நெருங்கி பழகினார்கள்.

மேலும் கேரளாவுக்கு வேலைக்கு சென்றுவிட்டு அடிக்கடி வரும் சசிகுமார் பணத்தை சாந்தாவிடம் கொடுத்து வந்ததார். இந்தநிலையில் சசிகுமாரின் சல்லாப புத்தி சாந்தாவின் மகள் மீது திரும்பியது. இந்தநிலையில் அடிக்கடி பள்ளியிலும் வீட்டிலும் சோர்வாக இருந்து வந்த மகளை சாந்தா மருத்துவமனைக்கு கொண்டு பரிசோதித்தபோது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது சாந்தாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனே மருத்துவர்கள் இரணியல் போலிசுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் விசாரித்ததில் மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் சசிகுமார் என தெரியவந்தது. கேரளாவுக்கு வேலைக்கு சென்று விட்டு அடிக்கடி வரும் சசிகுமார் சாந்தாவிடம் பணத்தை கொடுத்து பொருட்கள் வாங்க அனுப்பி விட்டு மது போதையில் மாணவியை மிரட்டி உல்லாசம் அனுபவித்ததை மாணவி கூறியுள்ளார்.

இதையடுத்து குழித்துறை அனைத்து மகளீர் போலிசார் காமக்கொடூரன்சசிகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.