புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டம் மதகடிப்பட்டு அடுத்துள்ள நல்லூர் பகுதியை சேந்த இளம்பெண் ஒருவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்று விட்டு 9 மணிக்கு வீட்டிற்கு திரும்பி செல்லும் போது அதே நிறுவனத்தில் வேலை செய்யும் அவரது நண்பர் அருள்ஜோதி என்பவர் தனியே பேச வேண்டுமென்று விநாயகபுரம் ரயில்வே பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இருந்த அவரது நண்பர் உட்பட 4 பேர் அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். மேலும் அந்த இளம்பெண்னை ரயில்வே தண்டவாளத்தில் இழுத்து சென்றதால் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளது.

sexual abuse to girl in puducherry

Advertisment

அதையடுத்து காயமடைந்த இளம்பெண்ணை அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட இளம்பெண்னுக்கு அரசுவேலை உள்ளிட்ட நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அப்பெண்ணின் உறவினர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் போலீசார் அருள்ஜோதியை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த வழக்குத் தொடர்பாக மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

Advertisment