சென்னையை ஆவடியைஅடுத்த திருமுல்லைவாயலில்4 வயது சிறுமி குளியலறையில்இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் தற்போது அந்த சிறுமிபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டது ஊர்ஜிதமாகியநிலையில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

sexual abuse

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் அந்தோணியார் தெருவைச் சேர்ந்தவர் தனியார் தொழிற்சாலை ஊழியரரானராஜேந்திரன்.இவரதுநான்கு வயதுமகள் சன்மதி வீட்டின் குளியலறையில்சடலமாக மீட்கப்பட்டார். மாலையில் இருந்தே சன்மதியைகாணவில்லை என உறவினர்களும், பெற்றோர்களும் தேடிவந்த நிலையில் வீட்டில் குளியலறையில்4 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதுதொடர்பாக திருமுல்லைவாயில் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்ததை அடுத்து சிறுமியின் உடலை மீட்ட காவல்துறையினர் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்த நிலையில் சிறுமியின் வீட்டின் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர்மீனாட்சி சுந்தரம் அந்த குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து குளியல் அறையில் கொலை செய்த அதிர்ச்சி தகவல்தெரிய வந்துள்ளது.