Advertisment

சென்னையில் வீடேறி குதித்து பாலியல் வன்கொடுமை;சுமார் 80 பெண்களை வன்கொடுமை செய்த கொடூரன் சிக்கினான்!!

சென்னையில் அம்பத்தூர், கொரட்டூர் உள்ளிட்ட பல இடங்களில் நள்ளிரவில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து வீடு புகுந்து பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த கொடூரன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் கொள்ளை போவதாது தொடர்பான புகார்கள் வந்ததை அடுத்து, காவல்துறையினர் பட்டறவாக்கம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும் வகையில் வந்த ஒருவரை மடக்கி விசாரித்த பொழுது அவன்வந்த வாகனத்துக்கு எந்த ஆவணங்களும் இல்லை, மேலும் அவனது பதில் முன்னுக்குப்பின் முரணாக இருந்தது. இதனால் அவனை விசாரிக்க முற்பட்ட போலீசார் அவனது மொபைலை வாங்கி பரிசோதனை செய்தனர். அதில் ஏராளமான பெண்களுடன் பிடிபட்ட அவன் பலாத்காரம் செய்த வீடியோக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ந்த போலீசார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தினர்.

Advertisment

h

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அந்த மொபைலில் உள்ள அனைத்து வீடியோவிலும் அவன் இருந்ததால் அந்த வீடியோக்கள் அனைத்தும் அவனே எடுத்துள்ளான். மேலும் பெண்களை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி உள்ளான் என்று போலீசார் உறுதி செய்தனர். இதனையடுத்து அவனை சிறப்பு கவனிப்புடன் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. விசாரணையில் அவன் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அறிவழகன் என்பது தெரியவந்தது. பெங்களூருவில் மென்பொறியாளராக பணிபுரிந்து வந்த அவன் ஓசூரில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் அங்கிருந்து சென்னைக்கு தப்பி வந்தான்.

கடந்த 2010ஆம் ஆண்டு வேளச்சேரி, கிண்டி, சைதாப்பேட்டை பகுதிகளில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை, சுமார்50 பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தான். அதோடு மட்டுமல்லாமல் அவர்களை மிரட்டி பணம், நகை ஆகியவற்றையும் பறித்துள்ளான். ஆனால் பணம் நகை திருடப்பட்ட விவகாரத்தில் மட்டுமே அவன் கைது செய்யப்பட்டிருந்தான். அப்படி நகை, பணம் திருட்டு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்ட அவன் மீது திருட்டு வழக்குகள் இருந்ததே தவிர பாலியல் கொடுமைகளுக்கு ஆளான பெண்கள் யாரும் புகார் கொடுக்க முன்வராததால் தப்பித்து வந்தான்.இந்நிலையில் பெண் ஒருவர் துணிச்சலாக புகார்கொடுத்தும் சைதாப்பேட்டை போலீசார் அந்த புகாரின் மீதான விசாரணையை திறம்பட நடத்தாததால் மூன்று மாதங்களுக்கு முன்பு அறிவழகன் ஜாமீனில் வெளியே வந்துள்ளான்.

h

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

ஜாமீனில் வெளியே வந்த பின் இருசக்கர வாகனம் ஒன்றை திருடியஅறிவழகன். இரவு நேரங்களில் தனது கைவரிசையை மீண்டும் காட்ட தொடங்கியுள்ளான். அம்பத்தூர், கொரட்டூர், அம்பத்தூர் எஸ்டேட் பகுதிகளில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு, வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து இந்த வேட்டையை நடத்தி உள்ளான்.அதாவது அவன் நோட்டமிட்டு வைத்திருக்கும் வீட்டின் வாசல் கதவை தட்டி விட்டு மறைந்து கொள்வான். பின்னர் வீட்டின் உள்ளே இருக்கும் பெண் கதவைத் திறந்தவுடன் சடாரென்று உள்ளே புகுந்து கதவை தாளிட்டு அசுர வேகத்தில் அவர்கள் மீது பாய்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பின்னர் அந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாகவும் பதிவு செய்து கொள்வான். அதன்பிறகு நகை, பணம் ஆகியவற்றை பறித்து சென்று விடுவான். அதன்பின் ஏற்கனவே அவன் எடுத்த வீடியோவைகாட்டி கணவன் வீட்டில் இருக்கும் போதே அந்த பெண்களிடம் கட்டாய பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளான் என்ற அதிர்ச்சி தகவலும் இந்த விசாரணையில் வெளிவந்துள்ளது.

h

குடும்ப மானம் போய்விடும் என கருதி பெரும்பாலான பெண்கள் இது பற்றி புகார் அளிக்காமல் இருந்து வந்துள்ளனர். இது அவன் தப்பிப்பதற்கு ஒரு பெரிய சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டு இருந்தான் எனகூறுகின்றனர்காவல்துறையினர். கடந்த 3 மாதத்தில் மட்டும் சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்ததுடன் நகைகளையும் எடுத்து சென்றுள்ளான்.கடந்த மாதம் அடுத்த மூன்று தினங்களில் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் 2 பெண்கள் உட்பட 3 பேர் இவரிடம் சிக்கியுள்ளனர். அவர்கள் மட்டுமே தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இதனை அடுத்து சம்பத்தப்பட்ட தெருக்களில்சிசிடிவி கேமரா பொருத்தினர். அந்த வகையில் ஆவடி, காமராஜ் நகரில் அறிவழகன் கைலி கட்டிக் கொண்டு ஒரு வீட்டிற்குள் ஏறி குதித்து உள்ளே செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. ஒரு வீட்டில் மட்டுமல்ல பல வீடுகளில் இது போல் தொடர் சம்பவங்களை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடும் சிசிடிவி காட்சி பதிவுகளும் கிடைத்துள்ளது.

h

பின்னணியில் அவனைக் காப்பாற்றுவதற்கு இரண்டு வழக்கறிஞர்கள்இருப்பதாகவும், அவர்கள்அவனிடமிருந்து கொள்ளையடித்த பணத்தில் பங்கு பெற்றுக் கொள்வதாகவும், வாகன சோதனையில் சிக்கினால்அவன் தங்களுக்கு தெரிந்தவன்தான் எனக்கூறி சிபாரிசு செய்து அவனைகாப்பாற்றி விட்டது தெரிய வந்துள்ளது. இதற்கிடையே காவல்துறையிடமிருந்து தப்பித்து ஓடி வழுக்கி விழுந்த கொடூரகொள்ளையன் அறிவழகனின்வலது கை முறிந்து போனது. அந்த இரவில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல்துறையிடம் விவரித்தபாதிக்கப்பட்ட மின்பொறியாளர் பெண் ஒருவர், இவனைப் போன்ற கொடூர குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராக முன்வரக் கூடாது என்றும், மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

police Chennai Sexual Abuse sexual harassment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe