Sewer poisoning that claimed life; incident in Avadi

பாதாள சாக்கடை சீர் செய்யும் பணியில் ஒப்பந்த பணியாளர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் ஆவடியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ஆவடி மாநகராட்சி குறிஞ்சி தெரு பகுதியில் பாதாள சாக்கடையை சீர் செய்யும் பணியில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான கோபிநாத் என்பவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது உள்ளே இறங்கிய அவர் விஷவாயு தாக்கி மயங்கினார். உடனடியாக அங்கிருந்த மற்ற பணியாளர்கள் கோபிநாத்தை மீட்க முயன்றனர்.தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு மீட்புப் படையினர் மூலம் கோபிநாத் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஷவாயு தாக்கி ஒப்பந்த பணியாளர் உயிரிழந்தது ஆவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.