Advertisment

கழிவுநீர் உறைக் கிணற்றில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு! 

sewage well two person incident police investigation

கழிவுநீர் உறைக் கிணற்றில் விஷவாயு தாக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர்.

சென்னை பெருங்குடிக்கு அருகே உள்ள கல்லுக்குட்டை பகுதியில் வசிக்கும் சரவணன் என்பவரின் வீட்டின் அருகே ஏழு அடி ஆழமுடைய உறைக் கிணற்றில் கழிவுநீரைச் சுத்தம் செய்யும் பணியில் காளிதாஸ் என்பவர் ஈடுபட்டார். அப்போது, விஷவாயு தாக்கி அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்ட சரவணன் என்பவர் அவரைக் காப்பாற்ற முயன்ற போது, தவறி கிணற்றில் விழுந்தார்.

Advertisment

தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்துகாவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

Chennai incident
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe