சேலம் மாவட்டம், சேவைபட்டி கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் என்பவர் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 12ஆம் தேதி தன்னுடைய கார் மூலம் சேலத்தில் இருந்து திருச்சியில் வேலையின் நிமித்தமாக வந்துள்ளார். பணியை முடித்துவிட்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, ஆமுர் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனங்களில் வந்த 4 மர்ம நபர்கள் காரை வழிமறித்து 5 சரவன் நகை, 15ஆயிரம் பணம், செல்போன் என மொத்தம் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணம் உள்ளிட்டவற்றைகொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து தினேஷ்குமார் வாத்தலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.