Skip to main content

கழிவுநீர் வெளியேற்றம்; 52 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிப்பு

Published on 18/10/2022 | Edited on 18/10/2022

 

sewage discharge; 52 dyeing rooms power cut!
பொறியாளர் செந்தில் விநாயகம் 

 

சேலத்தில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றியதாக 52 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. 

 

சேலம் மாவட்டத்தில் நீர்நிலைகளிலும், சாக்கடை கால்வாய்களிலும் கழிவுநீரை வெளியேற்றும் சாயப்பட்டறைகளை கண்டறிந்து மூடப்படுவதுடன் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சேலம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில் விநாயகம் தலைமையில் உதவி பொறியாளர்கள் குழுவினர் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து வருகின்றனர். 

 

கடந்த இரண்டு மாதங்களில் நடந்த ஆய்வில் மேச்சேரியில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி இயங்கிய 31 சாயப்பட்டறைகள், சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டியில் அனுமதியின்றி இயங்கிய 21 சாயப்பட்டறைகள் என மொத்தம் 52 சாயப்பட்டறைகள் கண்டறியப்பட்டன. இவை அனுமதியின்றி இயங்கியதோடு சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்காமல் கழிவுநீரை வெளியேற்றி வந்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக 52 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பும் அதிரடியாக  துண்டிக்கப்பட்டது.  

 

இது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகையில் ''கழிவு நீரை முறையாக சுத்திகரிப்பு செய்யாத நிறுவனங்கள் மூடப்பட்டு அபராதம் விதிக்கப்படும். அனுமதி பெறாத சாயப்பட்டறைகளுக்கு வாடகைக்கு இடம் அளித்தால் கட்டட உரிமையாளர் மீதும் வழக்கு தொடரப்படும். மேலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தியதாக இழப்பீட்டு தொகை வசூலிக்கப்படும்'' என்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்