சென்னையில் ஒரே நாளில் நான்கு இடங்களில் கத்தியை காட்டி வழிப்பறி நடத்துள்ளசம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மந்தைவெளியை சேர்ந்த காய்கறி வியாபாரி கனகராஜ் 17 ஆயிரம் ரூபாய் பணத்துடன் இன்றுஅதிகாலை ஆர்.கே சாலை மேம்பாலத்தில் இருக்கசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார் அப்போது அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் அவரை பாலத்திலேயே வழிமறித்து முகவரி கேட்பதுபோல் விசாரித்துள்ளனர். அப்போது இருவரும்கத்தியை காட்டி அவரிடம் இருந்த 17 ஆயிரம் ரூபாய் பணத்தை வழிப்பறி செய்துள்ளனர்.

Advertisment

chennai

அதேபோல் இன்று தாம்பரத்தை சேர்ந்த மணிகண்ட பிரபு என்பவர் தேனாம்பேட்டை மூப்பனார் மேம்பாலத்தின் அருகில் இருக்கசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பொழுது அவரை பின் தொடர்ந்து வந்த இரு மர்ம நபர்கள்தனக்கு மிகவும் அர்ஜெண்டாக மொபைல் தேவைப்படுகிறது ஒரே ஒரு போன்கால் செய்துவிட்டு தருகிறேன் என கெஞ்சும் தொனியில் பேசி அவரது மொபைலையும் அவரிடம் இருந்து 4 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருட முயற்சித்துள்ளனர். இதை சுதாரித்துகொண்ட பிரபு கூச்சலிட்டு அவர்களை பொதுமக்களிடம் பிடித்துக்கொடுத்து இறுதியில் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Advertisment

chennai

அதேபோல் அண்ணா நகரை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் கார்த்திகேயன் என்பவர் இன்று காலையில் என்எஸ்கே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது அவர் கையில் போட்டிருந்த தங்க செயினை மர்ம நபர்கள் திருட முயற்சித்துள்ளனர். இதேபோல் சென்னை வேப்பேரியில் ஒரு ஐடி ஊழியரிடமும் வழிப்பறி கும்பல் லேப்டாப், பணம் கேட்டு மிரட்டியதாக செய்திகள் வந்துள்ளன.

chennai

இப்படி சென்னையில் ஒரே நாளில் பல இடங்களில்நடந்தவழிப்பறி சம்பவங்களால் சென்னை மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.