Skip to main content

ஏழாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருங்கற்கால சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்- உயர்நீதிமன்றம் உத்தரவு

Published on 09/04/2019 | Edited on 09/04/2019

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டத்தில் உள்ள அரசு வனப்பகுதியில், புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழித்தடத்தில் பனையப்பட்டியிலிருந்து ராங்கியம் சாலையில் சுமார் நான்கு  கிலோ மீட்டர் தொலைவில்  உள்ள கண்ணனூர் வனப்பகுதியில் ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்குவியல், குத்துக்கல் ஆகியன  உள்ளன. இந்த கற்கால பண்பாட்டு சின்னங்கள் கற்பாறைகளைக் கொண்டு வட்ட வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மையத்தில் நெடுங்கற்கள் செங்குத்தாக நட்டு வைக்கப் பட்டுள்ளன. அவை மிகச் சமீப காலங்களில் வனத்துறையினரால் இயந்திர வண்டிகளைக் கொண்டு தைல மரக்கன்றுகளை நடுவதற்காக அழிக்கப்பட்டுள்ளதை அறிந்து அவ்விடத்தை தொல்லியல் ஆய்வுக்கழக தலைவர் மேலப்பனையூர் கரு.இராஜேந்திரன், மங்கனூர் ஆ.மணிகண்டன் , உறுப்பினர்கள் ம.மு.கண்ணன் , மஸ்தான் பகுருதீன் ஆகியோர் உறுதிசெய்தனர்.

 

highcourt

 

இது குறித்து கல்வெட்டு ஆய்வாளர் கரு.இராசேந்திரன் கூறுகையில் மனித இனம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகிறது. நமது முன்னோர்கள் பெருங்கற்காலத்திலிருந்து வரலாறுகளை பாறை ஓவியங்கள் , பெருங்கற்கால ஈமச்சின்னங்கள், தாழிகள் என பல்வேறு வகையில் பதிவு செய்து வந்திருக்கிறார்கள். அந்தவகையில்  கண்ணனூரில் உள்ளவை பெருங்கற்காலத்தைச் சேர்ந்த நெடுங்கல், கற்குவியல் வகையை சேர்ந்த நீத்தார் புதையிடமாக உள்ளது. இதன் காலம்  சுமார் ஏழாயிரம் ஆண்டுகள் வரை காலக்கணிப்பை கொண்ட வரலாற்று சின்னமாகும்.

 

 

இங்கு வாழ்ந்து வந்த மக்கள் இறந்தவர்களை முதுமக்கள் தாழிகளில் புதைக்கும்போது புதைத்து விட்டு அதன் மேல் வட்ட வடிவத்தில் கற்குவியலை  அமைத்து அதன் மையத்தில் மென்கிர் எனப்படும் குத்துக்கல் அல்லது நெடுங்கல் நட்டு வைத்திருக்கிறார்கள். இது சுமார் பத்து அடி உயரத்துடன் உள்ளது. இவ்வாறு அமைப்பது வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்டதாகும். இந்தப் பண்பாடும் பழக்கமும் சுமார் ஏழாயிரம் ஆண்டுகளில் இருந்து கிறிஸ்து பிறப்பதற்கு முன் 500-ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்திருக்கிறது. அதற்குப் பிறகுதான் சங்ககாலம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

  

highcourt

 

வருங்காலச் சந்ததியினருக்கு பழங்கால வரலாற்றை சொல்லக் கூடிய இந்தச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். இதன் முக்கியத்துவம்  தெரியாமல் வனத்துறையினர் தைலமரக் கன்றுகளை வளர்ப்பதற்காக இயந்திர வண்டிகளைக் கொண்டு இந்த வரலாற்றுச் சின்னங்களை அழித்திருக்கிறார்கள். இந்தப் பகுதிக்குள் டிராக்டர்களைக் கொண்டு உழுவதே தவறு. ஆனால் ஜேசிபி போன்ற இயந்திரங்களைக் கொண்டு பெருங்கற்காலப் பண்பாட்டு நினைவுச் சின்னங்களை உடைத்தும் கற்களைப் பிடுங்கிப் போட்டும் அழித்திருக்கிறார்கள்.

 

highcourt

 

புதுக்கோட்டை மாவட்டத்திலேயே அதிக நெடுங்கற்கள் கொண்ட இதைப் போன்றதொரு பெருங்கற்கால வரலாற்றுச் சின்னம் வேறெங்கும் இல்லை. சென்னை  மன்னர்கள் காலத்தில் பல இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால் இந்தப் பகுதிகள் அறிவிக்கப் படாமல் விடுபட்டுள்ளது. இதனைப் பாதுகாக்காமல் விட்டால் வருங்காலச் சந்ததியினர் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இயலாமல்  போய் விடும். இத்தகைய நினைவுச் சின்னங்கள் மேலும் வனத்துறையினரால் அழிக்கப்படாமல் இருக்கும் வகையில் வனத்துறையினரிடமிருந்து திரும்பப் பெற்று பல நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பை முள்வேலி அமைத்து  இந்திய தொல்லியல் துறையின் பாதுகாக்கப் பட்ட பகுதியாக உடனடியாக அறிவித்து இருக்கும் சின்னங்களை சிதையாமல் பாதுகாக்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். என்றார்.

 

மேலும் தொல்லறிவியல் ஆய்வாளர் ஆ.மணிகண்டன் கூறியதாவது புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தமட்டிலும் அதிகமான பாதுகாக்கப்பட்ட தொல்லிடங்களையும் மரபு சின்னங்களையும்  கொண்ட மாவட்டமாகும் ,சென்னை தொல்லியல் வட்டத்தின் கிட்டத்தட்ட பாதி எண்ணிக்கையில் இம்மவட்டத்திலேயே அமைந்துள்ளது. மேலும் கண்ணனூர் போன்ற பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளும் ஏராளமாக உள்ளன.  எனவேதான் இந்திய அரசின் தொல்லியல் துறை புதுக்கோட்டையை மையமாக வைத்து புதிய தொல்லியல் வட்டத்தை உருவாக்க நடவடிக்கை வேண்டும் என கோரி வருகிறோம் என்றார்.

 

 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த தகவல்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் நக்கீரன் இணையத்திலும் முதலில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

 

ஆனால் அதன் பிறகும்  அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்பதால் தொல்லியல் ஆய்வாளர் கரு.இராஜேந்திரன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவருக்காக மூத்த வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியன் ஆஜரானார். 

 

 

இந்த வழக்கு விசாரணை இன்று நீதியரசர்கள் கிருபாகரன், சுந்தர் ஆகியோரிடம் வந்தது. வழக்கை விசாரித்த நீதியரசர்கள்.. பண்பாட்டு சின்னங்கள் அழிக்கப்படுகிறது. பாதுகாக்கப்படவில்லை. கண்ணனூரில் அகற்றப்பட்ட சின்னங்களை மீண்டும் அதே இடத்தில் அமைப்பதுடன் வனத்துறை மேலும் அகற்றாமல் நிறுத்த வேண்டும். மேலும் அந்த பகுதியை பாதுகாப்பதுடன் தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க வேண்டும். மேலும் இந்த வழக்கில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

 

இதே போல புதுக்கோட்டை மாவட்டத்தில் மாத்தூர் ராமசாமிபுரம் அம்பலத்திடல் வில்வன்னி ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட முழுமக்கள் தாழிகள் போல, திருநாளூர், பெருஞ்சுனை, போன்ற பல்வேறு இடங்களிலும் அழிக்கப்பட்டு வரும் பழமையான வரலாற்று சின்னங்களை பாதுகாப்பதுடன் புதுக்கோட்டையில் தொல்லியல் ஆய்வு மையம் தொடங்கப்பட வேண்டும் என்து ஆய்வாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.