Advertisment

ஏழு ஆண்டுகள் காதல்... காதலியை மறக்க முடியாமல் இளைஞர் எடுத்த முடிவால் சோகத்தில் மூழ்கிய குடும்பம்...

தன்னுடன் பள்ளியில் படித்து வந்த மாணவியை 7 ஆண்டுகளாக காதலித்து வந்த கல்லூரி மாணவர், தனது காதலி உடல்நலக்குறைவால் இறந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

Coimbatore

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

கோவையைச் சேர்ந்த வசந்த் என்பவர், மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2-வது ஆண்டு படித்து வந்தார். அசோக்நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 வரை படித்த அவர், தன்னுடன் படித்த மாணவியை காதலித்து வந்தார். அவர்கள் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர்.

Advertisment

இந்த நிலையில் அந்த இளம்பெண் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி கடந்த 2 மாதத்துக்கு முன்பு பரிதாபமாக இறந்தார். 7 ஆண்டுகளாக காதலித்து வந்தவர் இறந்ததால் வசந்த் மிகவும் மனவேதனை அடைந்தார். இதனால் வீட்டிலும், கல்லூரியிலும் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் வசந்த் கல்லூரிக்கு செல்லவில்லை. இதனால் அவருடன் படிக்கும் நண்பர்கள் வசந்தின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் போனை எடுத்து பேசவில்லை. அவர்கள் வசந்தின் தந்தையின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு அவர் கல்லூரிக்கு வரவில்லை என்பதை தெரிவித்துள்ளனர்.

வசந்த்தை அவரது தந்தை வீட்டில் தேடியுள்ளார். ஆனால் அவர் வீட்டில் இல்லை. அக்கம் பக்கத்தில் தேடினார். அப்போது சேத்துமாவாய்க்கால் அருகே ஒரு மரத்தில் வசந்த் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார்.

தகவல் அறிந்தது செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். போலீசார் வசந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Dengue Youth Coimbatore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe