s

பரங்கிப்பேட்டையில் இருந்து கடலூர் நோக்கிச் சென்ற தீயணைப்பு வாகனம் பெரியப்பட்டு ஐந்து கண் மதகு அருகே சென்றபோது கடலூரிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்த அரசு பேருந்து மீது எதிர்பாராமல் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து மற்றும் தீயணைப்பு லாரியில் பயணம் செய்த 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

Advertisment

தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களைக் கடலூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த திடீர் விபத்தினால் கடலூர் சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கிரேன்கள் வரவழைக்கப்பட்டுத்தீயணைப்பு லாரி மற்றும் பேருந்தை அப்புறப்படுத்தினர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Advertisment