Seven people have been hospitalized due to the clash between DMK and BJP nagapattinam

நாகை அருகே திமுக, பாஜகவினரிடையே ஏற்பட்டமோதலால்ஏழுபேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை டாடா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் விஜேயந்திரன். திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்தவர். இவர் கடந்த மாதம் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். விஜேயந்திரனுக்கு பாஜகவில் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதைக் கொண்டாடும் விதமாக அந்தப் பகுதியில் விஜயேந்திரனின் ஆதரவாளர்கள் மற்றும் பாஜகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளனர். அப்போது பட்டாசு வெடித்த இடத்திற்குஅருகிலிருந்த திமுக நகர்மன்ற உறுப்பினர் ஞானமணியின் மளிகை கடையின் மீது விழுந்துள்ளது. அதோடு கடையிலிருந்த நகர்மன்ற உறுப்பினர் ஞானமணிக்கும் காதில் காயம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

Seven people have been hospitalized due to the clash between DMK and BJP nagapattinam

இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த ஞானமணியின் உறவினர்களும், ஆதரவாளர்களும் வெடி வெடித்தவர்களிடம் முறையிட இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலின் பாஜகவைச் சேர்ந்த 5 பேருக்கும், திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் உள்பட 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்களை நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்துமாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் அக்கரைப்பேட்டை, டாடா நகர், மருத்துவமனை வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மருத்துவமனையில் திமுக மற்றும் பாஜகவினர் குவிந்ததால் நகரம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.