Advertisment

கோவில் நுழைவு வாயிலில் தீ வைப்பு; போலீசார் விசாரணை 

Setting fire to the entrance gate of the temple; Police investigation

தென்காசி மாவட்டம் காசி விஸ்வநாதர் கோவிலில் பெட்ரோல் ஊற்றி மர்ம நபர் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

தென்காசி மாவட்டம் காசி விஸ்வநாதர் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாக இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வந்திருந்த பொழுது கோவில் நுழைவாயில் பகுதியில் திடீரென மர்ம நபர் ஒருவர் பெட்ரோலை ஊற்றி தீயை வைத்து விட்டு அங்கிருந்து ஓடி விட்டார். இதனால் அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. பக்தர்கள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அங்கிருந்து ஓடினர்.

Advertisment

உடனடியாக கோவில் பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த கோவிலுக்கு கும்பாபிஷேக பணிகள் நடந்து வரும் நிலையில் அதற்காக வைக்கப்பட்டிருந்த சாரத்தின் மீது பெட்ரோல் ஊற்றி மர்ம நபர் தீ வைத்தது அங்குப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த போலீசார் தீ வைத்த நபரை பிடித்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கடையம் பகுதியைச் சேர்ந்த பாலன் என்பது தெரிய வந்துள்ளது.

எதற்காக தீ வைத்தார் என்பது தொடர்பாக தென்காசி காவல் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

police temple thenkasi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe