serve sweets in kamala Harris hometown

ஜனநாயக கட்சியின் சார்பில் அமெரிக்காவின் துணை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று பதவி ஏற்க உள்ள கமலா ஹாரிஸ்க்கு மன்னார்குடி அருகே உள்ள கிராம மக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Advertisment

ஜனநாயக கட்சியின் சார்பில் அமெரிக்காவின் துணை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கமலா ஹாரிஸின் அம்மா பிறந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு துளசேந்திரபுரம்.

Advertisment

serve sweets in kamala Harris hometown

அந்த கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் கமலா ஹாரிஸ் போட்டியிட்ட நாளில் இருந்தே கோயில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் என விழாக்கோலமாக கொண்டாடினர். அவர் வெற்றிபெற்று அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டு இன்று பதவி ஏற்றதும், துளசேந்திரபுரம் கிராமமக்கள் அவரது தாய் பிறந்த கிராமத்தில் உள்ள தர்ம சாஸ்தா குலதெய்வ கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர்.

serve sweets in kamala Harris hometown

அதனைத்தொடர்ந்து குழந்தைகள் கமலா ஹாரிசின் உருவம்பொறித்தபதாகைகளை கையில் வைத்து கமலா ஹாரிஸ் வாழ்க என முழக்கமிட்டு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

Advertisment