Advertisment

அஸ்வத்தாமனை கஸ்டடியில் எடுக்கும் போலீசார்

Seriousness in Armstrong's case; Police take Aswathaman into custody

Advertisment

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த படுகொலை தொடர்பாக ரவுடிகளும், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமனை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்திருக்கும் நிலையில் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தற்பொழுது காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அஸ்வத்தாமன் வடசென்னை தாதாவானநாகேந்திரனின் மகன் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வழக்கில் ரவுடி நாகேந்திரனை வேலூர் சிறையில் வைத்தே போலீசார் கைது செய்திருக்கும் நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அவருடைய மகன் அஸ்வத்தாமனை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீசார் தயாராகி வருகின்றனர். எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் அஸ்வத்தாமனை போலீசார் நேரில் ஆஜர்படுத்த உள்ளனர்.

Investigation police amstrong
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe