Advertisment

6 பேருக்கு கடுமையான காயம்: ராதாகிருஷ்ணன் தகவல்

குரங்கணி காட்டுத்தீயில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

Advertisment

தீக்காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 6 பேருக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மீட்டுப் பணி நடக்கும் வனப்பகுதிக்கு 6 பேர் கொண்ட டாக்டர்கள் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருச்சியில் இருந்து டாக்டர்கள் குழு வரவழைக்கப்பட்டுள்ளது என்றார்.

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் டாப்ஸ்டேசன் உள்ளது. குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் குரங்கணி வனப்பகுதியில் பிடித்த தீயில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். மலைப்பகுதியில் சிக்கியுள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வனத்துறையினருடன் போலீஸ் மற்றும் ராணுவத்தினர் சேர்ந்து தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர். ஹெலிகாப்படரிலும் மீட்பு பணி நடந்து வருகிறது.

ias j radhakrishnan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe