Advertisment

திருச்சியில் சிக்கிய தொடர் பைக் திருடன்!

Series bike thief caught in Trichy!

Advertisment

திருச்சி மாநகரம், உறையூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பாத்திமாநகர், அகமதுகாலனி பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடுபோவதாக காவல்நிலையத்தில் புகார்கள் வந்தன. அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகர காவல் ஆணையரின் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையில் சந்தேக நபர்களின் நடவடிக்கையை தீவிரமாக கண்காணிப்பது, சந்தேக நபர்களின் அலைபேசி எண்களின் விபரங்களை சேகரிப்பது, திருச்சி மாநகரம் முழுவதும் சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்வது உள்ளிட்டவை செய்யப்பட்டு வந்தது. விசாரணையில் மணி (எ) மாசிலமணி(22) என்பவர் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டதை ஒப்புக்கொண்டார். உடனடியாக அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பப்பட்டார். மேலும், அவரிடமிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான மூன்று இருசக்கர வாகனங்களை போலீசார் கைப்பற்றினர்.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe