Advertisment

கஞ்சா விற்பனை; திருச்சியில் நடக்கும் தொடர் கைது நடவடிக்கை

A series of arrests for the sale of cannabis n Trichy!

திருச்சி எடமலைப்பட்டி புதூர், ராம்ஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் கஞ்சா விற்பனையை ஒடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று மொத்த வியாபாரியைக் கைது செய்த நிலையில், 1.4 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட மற்றொரு நபரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

Advertisment

திருச்சி மாநகரில் ராம்ஜி நகர், எடமலைப்பட்டி புதூர், கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனையைத்தடை செய்யும் வகையில் மாநகரக் காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மொத்த விற்பனை செய்து வந்த கஞ்சா வியாபாரி மதன் என்கிற மதுபாலனை நேற்று தனிப்படை போலீசார்அதிரடியாகக் கைது செய்தனர்.

Advertisment

இந்நிலையில், எடமலைப்பட்டி புதூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த ராம்ஜி நகர் மில் காலனி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 32) என்பவரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். அவரிடமிருந்து 1.400 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

Cannabis police trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe