Advertisment

தொடர் வாகன திருட்டில் சிக்காத நபர் காதலிக்காக நாய் திருடிய போது சிக்கிய சம்பவம்

Serial vehicle theft complaint... The young man was caught stealing a dog for his girlfriend

சென்னையில் இரு சக்கர வாகனங்களை குறிவைத்து திருடி வந்த இளைஞர் ஒருவர் தன் காதலிக்கு பரிசளிப்பதற்காக நாய் ஒன்றை திருடிய நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

சென்னை சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் பேட்டரிகள் உள்ளிட்டவற்றை இளைஞர் ஒருவர் திருடுவது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சுஜித் என்ற அந்த 22 வயது இளைஞன் சாலிகிராமம் தசரதபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் என்று கூறப்படுகிறது. இவர் விருகம்பாக்கம் பகுதியில் உள்ள இருசக்கர வாகனத்தை முதலில் திருடி இருக்கிறார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நபர்களின் வாகனங்களை சுஜித் திருடியுள்ளான்.

Advertisment

இப்படியான தொடர் திருட்டுக்கள் நிகழ்ந்ததையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அனைத்து திருட்டுக்களிலும் ஒரே நபர் ஈடுபட்டது தெரியவந்தது. இருப்பினும் திருட்டில் ஈடுபட்ட சுஜித்தை கைதுசெய்யமுடியவில்லை. இந்நிலையில் சுஜித் தன் காதலியை இம்ப்ரஸ் செய்வதற்காக உயர் ரக நாய் ஒன்றை திருடியுள்ளான். அப்பொழுது நாயின் உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், காட்சிகள் மூலம் அவனை பின் தொடர்ந்து சென்றுசுஜித்தை இறுதியாக கைது செய்தனர். அவனிடமிருந்து திருடப்பட்ட நாய், இருசக்கர வாகனங்கள், பேட்டரிகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தன் காதலிக்கு பரிசாக கொடுப்பதற்காக நாயை திருடியதாக இளைஞன் சுதீஷ் ஒப்புக்கொண்டதாக போலீசார் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

dog police Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe