Skip to main content

திட்டக்குடி பகுதியில் தொடர் திருட்டு...

Published on 19/10/2020 | Edited on 19/10/2020

 

Serial theft in Tittakkudi area ...

 

 

இரண்டு நாட்களுக்கு முன்பு ஆவினங்குடி காவல் நிலையம் அருகில் 24 மணி நேரமும் பரபரப்பான போக்குவரத்து நெடுஞ்சாலை  அருகில் சின்ராசு என்பவரின் வீட்டின் கதவை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளை அடிக்கப்பட்டது.

 

அதையடுத்து இரண்டு நாட்களுக்கு பிறகு நேற்று இரவு இராமநத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலம்பாடி கிராமத்தில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராம் குமார். இவரது வீட்டில் நுழைந்து 37 சவரன் நகை, சுமார் 1 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் பணம் அதோடு அவரது வீட்டில் வட்டிக்கு கடன் கொடுத்து அதன்மூலம் பெறப்பட்ட 50க்கும் மேற்பட்ட நோட்டுகளையும் கத்தையாக  கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதே ஊரில் உள்ள விவசாயி மணி என்பவர் வீட்டில் புகுந்து சுமார் 72 சவரன் நகை, சுமார் 6 லட்சம் பணம் கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.

 

ஒரே இரவில் ஒரே ஊரில் இரண்டு வீடுகளில் அடுத்தடுத்து நடந்துள்ள கொள்ளைச் சம்பவம் பற்றி நாம் விசாரித்த வகையில் இரண்டு வீடுகளிலும் அந்த குடும்பத்தினர்  தனித்தனி அறைகளில் தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர். நடு இரவில்  வீட்டின் உள்பக்க பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் அறைகளில் தூங்கியவர்கள் வெளியே வராத அளவில் அறை கதவை வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போட்டுவிட்டு பிறகு வீட்டுக்குள்ளிருந்த பீரோகளை அப்படியே தூக்கிச் சென்று அவர்கள் வீட்டுக்கு அருகே உள்ள சோளக்காட்டில் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை பணம் ஆகியவற்றை சாவகாசமாக கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். 

 

மேற்படி மணி, ராம்குமார் இருவரும் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் விவசாயிகள் ஆகியோரிடம் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வந்துள்ளனர். அப்படி வட்டிக்கு கொடுத்த பணத்திற்கு பதிலாக நூல்களை எழுதி வாங்கி வைத்திருந்தனர். ரோட்டுக் கடையில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் திட்டக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த சில நாட்களாக அவ்வப்போது வீடு புகுந்து கொள்ளையடிக்கும் கும்பல் தங்கள் வீர தீர கைவரிசை திட்டக்குடி பகுதியில் காட்டி வருகிறார்கள். காவல்துறை கொள்ளையர்களை பிடிப்பதில் திணறி வருவதாக குற்றம் சாட்டுகிறார்கள் திட்டகுடி பகுதி மக்கள். கொள்ளை சம்பவம் நடந்தவுடன் டி.எஸ்.பி வெங்கடேசன், மாவட்ட எஸ்.பி அபிநவ் மற்றும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் ஆகியவை வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியாக இருந்த பெண்; தாலியை பறித்த பக்கத்து வீட்டு இளைஞர்

Published on 16/03/2023 | Edited on 16/03/2023

 

cudalore tittakudi neighbour boy and woman gold thaali incident 

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ம.புடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி நல்லம்மாள் (வயது 50). நேற்று இவரது கணவர் ஊராட்சியில் நடைபெற்ற 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்வதற்காக சென்றுள்ளார். கணவருக்கு சமையல் செய்து கொண்டு நல்லம்மாள் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மதிய நேரம் அதே தெருவை சேர்ந்த மதியழகன் என்பவரது மகன் கார்த்திகேயன் (வயது 23) என்பவர் நல்லம்மாள் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் நல்லம்மாளிடம் எனக்கு திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடந்து மூன்று நாட்கள் ஆகிறது. என்னுடைய வருங்கால மனைவிக்கு தாலிச்சரடு செய்யப் போகிறோம். எனவே நீங்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தாலிச்சரடு மாடலை பார்க்க வேண்டும். அதேபோல் மனைவிக்கு செய்ய வேண்டும். எனவே உங்கள் சரடை எடுத்துக் காட்டுங்கள் என்று கூறியுள்ளார். வருங்கால மனைவிக்கு தாலிச்சரடு செய்ய மாடலாக கேட்கிறானே பையன் என்ற நல்ல எண்ணத்தோடு நல்லம்மாள் தன் கழுத்தில் அணிந்திருந்த தாலிச்சரடை கழுத்தில் இருந்து காட்டாமல் அப்படியே வெளியே எடுத்துக் காட்டியுள்ளார்.

 

திடீரென்று கார்த்திகேயன் தான் வைத்திருந்த பிளேடால் நல்லம்மாள் கழுத்தில் கிழித்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத நல்லம்மாள் தாலிச்சரடை கெட்டியாகப் பிடித்து கொண்டு கார்த்திகேயனிடம் போராடி உள்ளார். இதனால் கோபம் அடைந்த கார்த்திகேயன் பிளேடால் நல்லம்மாள்  உடலில் பல இடங்களில் கிழித்துள்ளார். இதனால் நிலை தடுமாறிய நல்லம்மாளை கீழே தள்ளிவிட்டு அவரது தாலிச்சரடை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார் கார்த்திகேயன். நல்லம்மாளின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். உடல் முழுவதும் ரத்த வழிய கிடந்த நல்லம்மாளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 

இது குறித்து ராமநத்தம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் நல்லம்மாளை சந்தித்து போலீசார் சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் பேரில் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கார்த்திகேயனை தேடினர். ம.புடையூர் கிராமத்தில் அரசு பள்ளி அருகே உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த கார்த்திகேயனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். ஒரே தெருவில் வசிக்கும் இளைஞர் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கழுத்தை அறுத்து தாலிச்சரடை பறித்து சென்ற சம்பவம் ம.புடையூர் கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

Next Story

மதிக்காத அதிகாரிகள்! கொதித்து எழுந்த மக்கள்! 

Published on 05/05/2022 | Edited on 05/05/2022

 

Public Struggle on thittakudi to karuvepilangkurichi road

 

கடலூர் மாவட்டம், திட்டக்குடி - கருவேப்பிலங்குறிச்சி நெடுஞ்சாலையில் உள்ள மாளிகை கோட்டம் ஊராட்சி பகுதியில் உள்ள பாபுஜி நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நீண்டகாலமாக வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய திட்டப்பணிகளான கழிப்பறை வசதி, சாலை, குடிதண்ணீர் வசதி ஆகியவற்றை நிறைவேற்றி தரக்கோரி பலமுறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் கண்டுகொள்ளாததால் நேற்று சாலை மறியல் நடத்தப் போவதாக அறிவித்தனர். 


இந்த தகவல் அறிந்த திட்டக்குடி வட்டாட்சியர் கார்த்திக், சமூகநல வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய் துறையினர் காவல் துறையினர் போராட முயன்ற மக்களை திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அந்த பேச்சுவார்த்தையின் போது நல்லூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தகவல் அளித்தும் யாரும் கலந்து கொள்ளவில்லை.


கிராம ஊராட்சிகளில் முக்கியமான திட்டப்பணிகளை நிறைவேற்றக்கூடிய அதிகாரம் படைத்தவர்களான ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், அலுவலர்கள் பேச்சுவார்த்தைக்கு வராதது கிராம மக்களை கோபத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து அந்த கிராம மக்கள், பெண்ணாடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்த காவல்துறை இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி, தாசில்தார் கார்த்திக், சமூகநல வட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆகியோர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.