Serial theft in the next few stores ..!

திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் உள்ள பிரிவு ரோடு பகுதியில், சத்யராஜ் என்பவர் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். அவருடைய கடைக்கு அருகில் பகளவாடி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல கடைகள் மூடிவிட்டு கடைத்தெருவில் இருந்தவர்கள் வீடு சென்றுள்ளனர்.

Advertisment

இந்நிலையில், அப்பகுதியில் மத்திய கூட்டுறவு வங்கியில் இரவு காவலராகப் பணி புரியும் வேல்முருகன் என்பவர் பணி முடிந்து இன்று காலை வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, பிரிவு சாலை அருகே வந்த சமயத்தில் அவருடைய நண்பரான சத்யராஜ் எலக்ட்ரிக்கல் கடை திறக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisment

Serial theft in the next few stores ..!

அங்கு வந்து பார்த்தபோது, சத்யராஜின் எலக்ட்ரிக் கடை மற்றும் அருகே இருந்த சரவனணின் டைல்ஸ் கடை ஆகியவற்றில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. கடையில் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், துறையூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்க முயற்சித்த போதிலும் இணைப்பு கிடைக்காததால் அவசர எண் 100க்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் துறையூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் சோதனை செய்தனர். அதன்பின் வழக்குப் பதிவு செய்யப்பட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.