திருச்சி அரியமங்கலம், அம்பிகாபுரம் பகுதியில் தொடர்ச்சியாக உள்ள ஐந்து கடையில் மர்ம நபர்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். கடந்த 4 நாட்களாக ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில், எண்ணெய் கடை, பால் விற்பனை நிலையம், அரிசிக் கடை என ஐந்து கடைகளில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதில் அரிசிக் கடையில் 12 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் உள்ளே வைக்கப்பட்டிருந்த டிவி உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிந்த அரியமங்கலம் காவல்துறையினர் அங்கு விரைந்து, திருடுபோன கடைகளைச் சோதனை செய்து கைரேகைகளைச் சேகரித்துள்ளனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.