serial robbery with a knife; Three arrested

Advertisment

சென்னையில் வாகன ஓட்டிகளிடம் கத்தியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஈ.சி.ஆர் சாலையில் உள்ள பாலவாக்கம் பகுதியைச்சேர்ந்த ராஜூ என்பவர் வீட்டிற்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.

இதுகுறித்து நீலாங்கரை காவல்நிலையத்தில் ராஜு புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் நிஜாமுதீன், ஆனந்தன், அப்பு ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல இடங்களில் இதுபோன்று வழிப்போக்கர்களை கத்தியைக் காட்டி மிரட்டி பைக், செல்போன், பணம் ஆகியவற்றை பறிப்பதை தொடர்ச்சியாக செய்து வந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுமூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.