கடந்த சிலமாதங்களுக்கு முன்பு தேனி மாவட்டதில் உள்ள பெரியகுளம் அருகே இருக்கும் மேல்மங்கலத்தில் புத்தாண்டு கொண்டாடத்தில் ஆரம்பித்த கொலையைத் தொடர்ந்துதான் கடந்த சிலதினங்களுக்கு முன்பு உத்தமபாளையம் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வழக்கறிஞர் ரஞ்சித்குமாரை ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்து விட்டு கொலையாளிகள் தப்பி ஓடினார்கள்
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் உத்தமபாளையம் சார்பு நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார் நீதிமன்றத்தில் தனது பணியை முடித்துவிட்டு கோவிந்தன்பட்டி அருகே குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது நிலத்தகராறில் அவரை பின் தொடர்ந்து வந்த சூப் செல்வம் என்பவர் ஒட்டி வந்த கார் மோதியதில் நிலை தடுமாறி விழுந்துள்ளார். காரிலிருந்து இறங்கிய கூடலூரைச் சேர்ந்த வக்கீல் ஜெயபிரபு. கம்பத்தைச் சேர்ந்த மதன். ஆனந்தன் மற்றும் பலர் பயங்கர ஆயுதங்களுடன் கண் இமைக்கும் நேரத்தில் இறங்கி அவரை சரமாறியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த வழக்கறிஞற் ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கொலை செய்த நபர்கள் தங்களுடைய வாகனத்தில் ஏறி தப்பி விட்டனர்.சம்பவம் பற்றி தகவல் தெரிந்து வந்த உத்தமபாளையம் போலீசார் ரஞ்சித்குமாரின் உடலைக் கைப்பற்றித் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இச்சம்பவ இடத்திற்கு வந்த தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய் சரண்னோ குற்றவாளிகளை பிடிக்க உத்தமபாளையம் டி.எஸ்.பி சின்னகன்னு தலைமையில் ஆய்வாளர் முருகன்,சார்பு ஆய்வாளர்கள் அழகு, ராஜா.ஜெயபாண்டி, முனியம்மாள்,வினோத்,திவான் மைதீன் ஆகியோர் அடங்கிய தனிப்படை பிரிவு போலீசாரை நியமித்து கொலைக்கான காரணம் குறித்தும் குற்றவாளிகள் குறித்தும் விசாரணை செய்து வந்தார்.
இக்கொலைச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கறிஞர் ரஞ்சித்குமார் கொலை வழக்கில் காவல்துறை மோப்ப நாய் உதவியுடன் தீவிரமாக விசாரணை செய்து வந்ததில் இந்தக் கொலை சம்பவத்தின் போது கார் டிரைவராக செயல்பட்ட சூப் செல்வம், கொலை நடந்த மறுநாள் கொடைக்கானல் போகும் வழியில் கெங்குவார்பட்டி செக்போஸ்டில் வைத்து கைது செய்யப்பட்டார். சூப் செல்வத்தின் கைதை தொடர்ந்து மீதமுள்ள நபர்களைதேடி வந்தனர் கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் ரஞ்சித்குமாரின் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்ய சொல்லி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டனர்.
அதன்படி குற்றவாளிகள் பயன் பயன்டுத்திய செல்போன் சிக்னலை வைத்து கூடலூரைச் சேர்ந்த வக்கீல் ஜெயபிரபு. கம்பத்தைச் சேர்ந்த மதன்மற்றும் ஆனந்தன் ஆகியோரை உத்தமபாளையம் போலீஸார் கைது செய்தனர். மீதமுள்ள கொலையாளிகளை தீவிரமாகத் தேடிவந்த நிலையில்மற்ற குற்றவாளிகள் கொடைக்கானலில் இருந்து பேருந்தில் வருவதாக ரகசிய தகவலின் அடிப்படையில் பேருந்தை மறித்து சோதனை செய்த தனிப்படை போடி ராசிங்காபுரத்தை சேர்ந்த பாண்டி மகன் ராஜேஸ், மதுரையைச் சார்ந்த மலைராஜா மகன் சஞ்சய்குமார், சுப்புராம் மகன் ராஜா.கருப்பணன் மகன் வேல்முருகன் ஆகியோரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.தேனி மாவட்டத்தில் பெரியகுளம்,கம்பம்,போடி,உத்தமபாளையம் என தொடர் கொலைகள் நடந்து வருகிறது.அமைதி பூங்காவாக இருந்த தேனி மாவட்டம் தொடர் கொலைகளால் பீதியில் இருக்கிறது.இருந்தாலும் இக்கொலை குற்றவாளிகளை இரண்டே நாளில் தனிப்படை போலீசார் பிடித்ததைக் கண்டு பொதுமக்கள் ஒருபுரம் பாராட்டியும் வருகிறார்கள்.