Advertisment

தொடர் குற்றம்! குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது! 

Serial crime! The culprit was arrested under the goondas Act!

ஸ்ரீரங்கம் திம்மராயசமுத்திரத்தில் கோவில் திருவிழாவின் போது கத்தியை காட்டி மிரட்டி பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

Advertisment

கடந்த 27.03.22-ந் தேதி திருவானைக்கோவில் ட்ரங்க்ரோட்டில் நடந்து சென்றவரிடம் கத்தி காட்டி மிரட்டி இரண்டாயிரம் பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, வழக்கில் சம்மந்தப்பட்ட கும்பக்குடி வசந்த்(23) என்பவரை ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Advertisment

மேலும் விசாரணையில் கும்பக்குடி வசந்த் மீது கடந்த 2020ம் ஆண்டு திம்மராயசமுத்திரத்தில் கோவில் திருவிழாவின்போது ஒருவரை கொலை செய்ய முயற்சி செய்த வழக்கும், 2021ம் ஆண்டு கோவில் திருவிழாவின்போது கத்தி மற்றும் கட்டையால் ஒரு வீட்டின் கூரை, இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திய வழக்கு மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் 8 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

எனவே கும்பக்குடி வசந்த் தொடர்ந்து அடிதடி சம்பவங்களில் ஈடுபடுவதும், பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பவர் என விசாரணையில் தெரியவந்ததால் அவர் மேலும், தொடர் குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe