Advertisment

தொடர் தாக்குதல்; இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வழக்கு

serial attack; Case against Sri Lankan pirates

அண்மையாகவே இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அதிகரித்துவரும் நிலையில், அதேநேரம் இலங்கை கடற்கொள்ளையர்களாலும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

Advertisment

அண்மையில் வேதாரண்யம் பகுதியில் உள்ள வானவன் மகாதேவி கிராமத்தில் இருந்து சென்ற மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதுபோன்ற இரண்டு தாக்குதல் சம்பவங்கள் இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் மீதுநிகழ்த்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் இந்த இரண்டு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக இலங்கை கடற்கொள்ளையர்கள் ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

fisherman Vedaranyam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe