Advertisment

சித்ரா வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்!

serial actress chithra case chennai district commissioner order

Advertisment

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்து சென்னை மாநகர ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி சென்னை அருகே நசரத்பேட்டையில் உள்ளநட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலை வழக்கு தொடர்பாக, நசரத்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.

இதனையடுத்து, தற்கொலைக்குத் தூண்டியதாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Advertisment

வரதட்சணை கொடுமை, ஹேம்நாத்தின் சந்தேகம், அரசியல் பிரபலங்களுடனான சித்ராவின் தொடர்பு, போதைப் பொருள் என பல்வேறு கோணங்களில்தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படும்நிலையில் சின்னத்திரை நடிகை சித்ராவின்தற்கொலை வழக்கை மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

Chennai Police Commissioner actress chitra
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe