செப்டம்பர் 26இல் ‘ஊராட்சி மணி’ திட்டம் தொடக்கம்

On September 26, the panchayat bell project started

செப்டம்பர் 26 ஆம் தேதி ஊராட்சி மணி என்ற திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக 'ஊராட்சி மணி' என்ற அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத்திட்டத்தின் கீழ் ஊராட்சி தொடர்பான புகார்களைத்தெரிவிக்கலாம் எனத்தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த ஊராட்சி மணி திட்டத்தைத்தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த ஊராட்சி மணி அழைப்பு மையத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்கள் தங்களின் புகார்களைத்தெரிவிக்கும் விதமாக, மைய அழைப்பு எண்ணாக 155340 என்ற தொடர்பு எண் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் தொடர்பு அலுவலராக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (வளர்ச்சி) அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்
Subscribe