மேகதாது அணைக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்

Separate resolution in the legislature against the Megha Dadu Dam!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மேகதாது அணைக் கட்டுவதை எதிர்க்கும் தீர்மானத்தை இன்று சட்டப்பேரவையில் முன்மொழிந்தார் அமைச்சர் துரைமுருகன். அப்போது பேசிய அவர், "கர்நாடக அரசின் செயலுக்கு கடும் எதிர்ப்பைத்தமிழக அரசு பதிவு செய்கிறது. மேகதாதுவில் அணைக் கட்ட எந்தவித அனுமதியும் மத்திய அரசு கொடுக்கக்கூடாது .

காவிரி பிரச்சினையில் நான் என்ன செய்தேன், நீ என்ன செய்தாய் என்ற வாதத்தை விட்டு விடுவோம். காவிரி பிரச்சனைக்காக நாம் போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம்; தோற்றுவிட்டால் அடுத்த தலைமுறை நம்மைச் சபிக்கும்" என்று தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார் துரைமுருகன்.

duraimurgan
இதையும் படியுங்கள்
Subscribe