Advertisment

'ஒரே நாளில் தனித்தனி கூட்டம்'-பாமகவில் உச்சகட்ட பரபரப்பு

'Separate meeting on the same day' - stir in PMK

பாமகவின் நிறுவனர் ராமதாஸுக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் பாமக இரண்டு அணியாக பிளவுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும் தீர்வு எட்டப்படாத சூழலே நீடிக்கிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.

Advertisment

ராமதாஸால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களும் மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாமகவிற்கு புதிய பொதுச்செயலாளரை ராமதாஸ் நியமனம் செய்துள்ளார். பாமக மாணவரணி செயலாளராக இருந்த முரளி சங்கர் பாமகவின் மாநில பொதுச் செயலாளராக ராமதாஸ் அறிவிக்கப்பட்டதோடு, வடிவேல் ராவணனை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Advertisment

'Separate meeting on the same day' - stir in PMK

இது ஒருபுறம் இருக்க திருவள்ளூரில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியுள்ளது. திருவள்ளூரில் தனியார் மண்டபத்தில் இந்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பாமகவிற்கு புதிய உறுப்பினர் சேர்க்கை; வாக்குச்சாவடி முகவர்கள் நியமிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ராமதாஸால் நீக்கப்பட்ட பாமக பொருளாளர் திலகபாமா, வழக்கறிஞர் பாலு, பொதுச் செயலாளராக இருந்த வடிவேல் ராவணன் உள்ளிட்ட பலர் அன்புமணியின் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த கூட்டத்திற்கு பின்னர் அங்கிருந்து செங்கல்பட்டு செல்லும் அன்புமணி அங்கு நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

anbumani ramadoss Ramadoss pmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe