Published on 04/08/2021 | Edited on 04/08/2021

தமிழ்நாடு பட்ஜெட்டை ஆகஸ்ட் 13ஆம் தேதி அன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாக சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்ற பின் முதன்முதலாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ள முதல் பட்ஜெட் இதுவாகும்.
இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் முதன் முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதற்கான பட்ஜெட்டை ஆகஸ்ட் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என நிதித்துறைச் செயலாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.