செப்டம்பர் 8 ஆம்தேதி தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக பதவி ஏற்கிறார் முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

Sep 8: Tamilisai to be sworn in as governor

கடந்த ஞாயிற்று கிழமை தமிழக பாஜக தலைவராக பதவிவகித்து வந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் அவர் ஆளுநராக நியமிக்கப்பட்டத்தற்கான நியமன ஆணையை இன்று பெற்றுக்கொண்டார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,எனக்கு இந்த வாய்ப்பை தந்த மோடி, அமித்ஷா, ஜேபி.நட்டாவிற்கு எனது நன்றி. தமிழ் மக்களின் பிரதிநிதியாகவும், தெலுங்கு மக்களின் சகோதரியாகவும் செல்கிறேன். அனைத்திலும் தேர்ச்சி பெறுவதுதான் எனது பழக்கம் ஆளுநர் பதவியிலும் பாஸ் ஆவேன். தமிழகத்திற்கும், தெலுங்கானாவிற்கும் ஒரு தமிழ் மகளாக, பாலமான செயல்படுவேன் என்றார்.

Advertisment

இந்நிலையில்தற்போது அவர் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக செப்டம்பர் 8 ஆம்தேதி பதவியேற்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.