Advertisment

சம்மன் அனுப்பியும் ஆஜராகாத செந்தில் பாலாஜியின் சகோதரர்

Senthilbalaji's brother who failed to appear despite summons

விசாரணைக்கான சம்மன் அனுப்பியும் செந்தில் பாலாஜியின் சகோதரர் ஆஜர் ஆகவில்லை எனத்தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நாளை காலை அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

Advertisment

முன்னதாக, ஓரிரு தினங்கள் முன் செந்தில் பாலாஜியின் சகோதரருக்கும் அமலாக்கத் துறை விசாரணைக்கான சம்மன் அனுப்பி இருந்தது. அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் விசாரணைக்கு ஆஜர் ஆகவில்லை என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் தகவல்களை பெற வேண்டிஅவரது சகோதரர் அசோக்கிற்கு இரு முறை சம்மன் அனுப்பப்பட்டது.

சம்மன் கொடுக்கப்பட்ட தேதியில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜர் ஆகும்படியும் சம்மனில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது வரை அசோக் அமலாக்கத் துறையினரின் அலுவலகத்தில் ஆஜர் ஆகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அசோக் தரப்பில் இருந்து தனக்கு கூடுதல் அவகாசம் வேண்டும் எனக் கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகவில்லை எனில் அதற்கான உரிய விளக்கத்தை தரவேண்டும் என்றும் அவ்வாறு இல்லை எனில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

senthilbalaji
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe