Advertisment

நேரில் ஆஜரான செந்தில் பாலாஜி; காவலை நீட்டித்த நீதிமன்றம்!

Senthilbalaji who appeared in person; The court extended the custody

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

Advertisment

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். இதனையொட்டிசெந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி கடந்த முறை காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22 ஆம் தேதி வரை 33ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில், அமலாக்கத்துறையின் வழக்கின் அசல் ஆவணங்களை பெற்றுகொள்ள சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று (22.04.2024)செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதற்காக புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதனையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 34 ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணையை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

court
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe