திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், தற்போது அரவக்குறிச்சி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதை அடுத்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.