speech

Advertisment

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அண்மையில் செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்தார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இணையும் விழா இன்று மாலை 5 மணிக்கு கரூர் திருமாநிலையூரில் இருந்து ராயனூர் செல்லும் வழியில் உள்ள கலைவாணி நகரில் நடைபெற்றது.

அப்போது பேசிய செந்தில் பாலாஜி, வருகிற மே மாத இறுதியில் இடைத்தேர்தல் முடிவுகள் அஇஅதிமுகவின் இறுதித்தேர்தலாய் இருக்கும். அதை உறுதி செய்து காமராஜரும், அண்ணாவும், டாக்டர் கலைஞரும் அமர்ந்த அரியணையில் திமுக தலைவர் அமர்வார். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வென்று இந்திய தேசத்தின் பிரதமரை தேர்ந்தெடுக்கக் கூடியவர் திமுக தலைவர். இவ்வாறு பேசினார்.