Senthil Balaji saved the accident victims!

Advertisment

தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜி நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய 15 ந் தேதி சென்றார். பிறகு மீண்டும்கோவை திரும்புகையில், கோவை மாவட்டம் அன்னூர்-பொங்கலூர் இடையே வந்து கொண்டிருக்கையில் ஒரு சிஃப்டு காரும்-பொலேரோகாரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டது.

இதில், விபத்தில் படுகாயம் அடைந்தவர்களைக் கண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை மீட்டு, தனது பாதுகாப்பு வாகனத்தில் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அப்போது உடனிருந்த திமுக கோவைகிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சிங்காநல்லூர் நா.கார்த்தியும் உடன் சென்றார். மேலும் நிர்வாகி சத்தியமூர்த்தி உள்ளிட்ட திமுகவினரையும் மருத்துவமனைக்கு அமைச்சர் அனுப்பி வைத்தார்.