senthil balaji

Advertisment

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அண்மையில் செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்தார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இணையும் விழா இன்று மாலை 5 மணிக்கு கரூர் திருமாநிலையூரில் இருந்து ராயனூர் செல்லும் வழியில் உள்ள கலைவாணி நகரில் நடைபெற்றது.

அப்போது பேசிய செந்தில் பாலாஜி,

எடப்பாடி பழனிசாமி துரோகத்தைப் பற்றி பேசுகிறார். கூவத்தூரில் முட்டிப்போட்டு முதலமைச்சரானவர். நான், என்னோடு 5 அல்லது 6 பேர் ஓட்டுப்போடவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமி அன்னைக்கே வீட்டுக்கு போயிருப்பார். விவசாயம் பார்க்க போயிருப்பார். கிரஷரில் வியாபாரம் பார்க்க போயிருப்பார். ஆனால் இன்று ஏதோ தேசத்தில் நன்மை செய்துவிட்ட மாதிரி பேசுகிறார்.

எடப்பாடி பழனிசாமி அவர்களே நீங்கள் வேண்டுமென்றால் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கலாம். ஆனால் நீங்களும் நானும் ஒரே நாளில்தான் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டோம். வரலாறை மறந்துவிட்டு பேச வேண்டாம். ஏதோ நீங்கள் எனக்கு வாய்ப்புக் கொடுத்து வெற்றிபெற செய்ததுபோல் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.

Advertisment

நான் இந்த மேடையில் நின்று சொல்கிறேன். எடப்பாடி பழனிசாமி அவர்களே இன்று அல்லது நாளை உங்களது முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களை சந்தித்து, தேர்தலில் வாக்கு கேட்டு நீங்கள் முதல் அமைச்சர் நாற்காலியில் அமருங்கள். நான் அரசியலைவிட்டு விலகிக்கொள்கிறேன். இல்லையென்றால் நீங்கள் அரசியலைவிட்டு விலகிக்கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.