Advertisment

திமுகவில் இணைகிறார் செந்தில் பாலாஜி!!!

Senthil Balaji

டி.டி.வி. தினகரனுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்த அரவக்குறிச்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட செந்தில்பாலாஜியுடன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடத்திய ரகசிய சந்திப்பு பலன் அளித்துள்ளது.

Advertisment

வருகிற 16ஆம் தேதி நடைபெறும் கலைஞர் சிலை திறப்பு விழாவில் திமுகவில் தனது ஆதரவாளர்களுடன் செந்தில் பாலாஜி இணைகிறார். அவருடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் இணைவார்களா என்பது இன்னும் முடிவாகவில்லை.

Advertisment

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் அதிமுகவில் இணைந்தால் அவர்களுக்கு வரக்கூடிய இடைத்தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததினால் அவர்களில் பலர் செந்தில்பாலாஜியுடன் திமுகவில் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

இது இடைத்தேர்தல்களில் திமுகவின் வெற்றியை உறுதிப்படுத்தக்கூடிய செயல் என்பதால் ஸ்டாலின் இந்த பேச்சுவார்த்தையை அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் ஒப்படைத்து, களம் இறக்கியுள்ளார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி மேற்கொண்ட பெரிய அரசியல் மூவ் வெற்றி அளித்துள்ளது என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

anbil poyyamozhi join senthil balaji
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe