
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாகச் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு கடந்த ஜூன் 21 ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.
அவரதுகைது தொடர்பாக வழக்குகளும் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அவர் சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனையில் இருந்துடிஸ்சார்ஜ் ஆக உள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாவது முறையாக அவருக்கு 26 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீடிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் உடல்நிலை தேறி வருவதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.புழல் சிறையிலும் அவருக்குத்தொடர்ந்து சிகிச்சைகள் நீடிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)