sentenced to life imprisonment!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மகன் முருகேசன் (36). தனது வீட்டில் தங்கியிருந்த 15 வயது அக்கா மகளுக்கு பாலியல் தாக்குதல் செய்தது குறித்து சிறுமி தனது அம்மாவிடம் சொல்லி அழுத நிலையில் முருகேசனின் அக்கா ஆலங்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் முருகேசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisment

 sentenced to life imprisonment!

இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் திங்கட்கிழமை நீதிபதி சத்யா தீர்ப்பு கூறியுள்ளார். அந்த தீர்ப்பில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தாக்குதல் கொடுத்த முருகேசனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் ரூ.30 ஆயிரம் அபராதம். அபராதத் தொகை கட்டத் தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டணையும் வழங்கியதுடன் பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் அரசு நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார். இதேபோல புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் அதிரடி தீர்ப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

Advertisment

தொடர்ந்து இதுபோன்ற வழக்குகளில் தேவையான விசாரணை சாட்சிகளை முன்னிறுத்தும் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் பாராட்டினார்.