Skip to main content

உணவகம் என்ற பெயரில் பாலியல் தொழில்; போலீஸின் நடவடிக்கையால் அம்பலமான உண்மை

 

sensational incident at Velankanni

 

உணவகம் என்ற பெயரில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த சம்பவம் வேளாங்கண்ணி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள முச்சந்தி பகுதியைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவர் சேகர் உணவகம் என்கிற பெயரில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த ஹோட்டல் பிசினஸும் தடபுடலாக நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில், இந்த ஹோட்டல் மாடியில் இளம்பெண்னை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக வேளாங்கண்ணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

 

அதன்பேரில், சம்மந்தப்பட்ட இடத்திற்கு மாற்று உடையில் சென்ற போலீசார், அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது, போலீசாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் திடீரென ஹோட்டலுக்குள் புகுந்து, அங்குள்ள அறைகளை சோதனை செய்ததில், அந்த ஹோட்டலில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் செய்துவந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த ஹோட்டல் உரிமையாளரான பக்கிரி சாமியை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதன்பிறகு, அந்த ஹோட்டலில் இருந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த இளம்பெண்ணை அங்குள்ள காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

 

இந்நிலையில், பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தளமான வேளாங்கண்ணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான லாட்ஜ்க்கள் இருக்கின்றது. அத்தகைய லாட்ஜ்கள் அனுமதியோடும் அனுமதியில்லாமலும் இயங்கி வருகிறது. அதே சமயம், இவற்றில் பெரும்பான்மையான லாட்ஜ்களில் பாலியல் தொழில் நடைபெற்று வருகிறது. இது காவல்துறையினருக்கும் நன்றாகத் தெரியும் எனக் கூறப்படுகிறது. அவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு இதைக் கண்டும் காணாததும் போல் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் வேளாங்கண்ணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !