Advertisment

''முதுகிலேயே குத்திட்டாங்க...'' பரபரப்பு ஆடியோ-பொன்னையன் எடப்பாடி சந்திப்பு!

Sensational audio-Ponnaiyan Edappadi meeting!

அதிமுகவின் மூத்த உறுப்பினரான பொன்னையன் பேசியிருந்ததாக நேற்று வெளியாகியிருந்த ஆடியோ அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 'வெளியான அந்த ஆடியோவில் 'நான்கு வருஷமா கொள்ளை அடிக்கவிட்டார் பாத்திங்களா எடப்பாடி, அதான் அவர் முதுகுலையே இப்ப குத்திட்டாங்க. அதனாலதான் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுறாரு'' என்ற குரல்பதிவு இருந்தது. அதனைத் தொடர்ந்து அந்த ஆடியோவில் இடம்பெற்றுள்ளது தன்னுடைய குரல் அல்ல, தான் பேசியது அல்ல, மிமிக்கிரி செய்யப்பட்டது என பொன்னையன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதேபோல் நாஞ்சில் கோலப்பன் சார்பில் ஆடியோவில் இடம்பெற்றுள்ளது பொன்னையனின் குரல் தான், நான் தான் அவருடன் பேசினேன் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த அறிவிப்பில், கட்சிப் பொறுப்புகளில் சில மாற்றங்களை கொண்டுவந்திருந்தார். குறிப்பாகஅதில் அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருந்த பொன்னையன் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை பொன்னையன் சந்தித்துள்ளார். சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

Advertisment

admk audio Ponnaiyan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe