nn

திருவண்ணாமலையில் சொந்த குடும்பத்தினர் ஐந்து பேரை வெட்டிக்கொன்று விட்டு கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள காஞ்சி என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் பழனி. இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு மூன்று மகள்கள் ஒரு மகன் என மொத்தம் 4 குழந்தைகள் உள்ள நிலையில், அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

Advertisment

இந்நிலையில், நேற்று ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி, மூன்று மகள்கள், ஒரு மகன் என மொத்தம் ஐந்து பேரையும் பழனி வெட்டிக்கொன்று அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் மனைவி வள்ளி (37), மகள்கள் திரிஷா (15), மோனிஷா (14), சிவசக்தி (6) மகன் தனுஷ் (4), பழனி என 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.