Advertisment

தகாத உறவால் கொலை... ஜாமீனில் வந்த இளைஞர் தற்கொலை..!

The husband who was an obstacle to love

Advertisment

செஞ்சியை ஒட்டியுள்ளது ராஜகிரி கோட்டை. இதன் மலை அடிவாரத்தில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக செஞ்சி போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து செஞ்சி டி.எஸ்.பி இளங்கோவன், இன்ஸ்பெக்டர் சக்தி, சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அங்கு வாயில் நுரை தள்ளியபடி இளைஞர் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது சடலத்தின் அருகே விஷ பாட்டில் ஒன்றும் அந்தப் பாட்டிலுடன் குளிர்பான பாட்டிலும் அங்குமிங்கும் சிதறிக் கிடந்தன. இதன் மூலம் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து அந்த இளைஞர் இறந்திருப்பது தெரியவந்தது.

மேலும், இறந்த நபரின் உடைகளை சோதனை செய்ததில் அவர் விக்கிரவாண்டி அருகே உள்ள பனையபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராக்கி என்கிற ராதாகிருஷ்ணன் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசாரின் விசாரணையில் வாலிபர் ராதாகிருஷ்ணன், கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி தனது ஊரைச்சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத காதலில் ஈடுபட்டிருந்ததும், அதற்கு இடையூறாக இருந்த காதலியின் கணவர் லியோ பால் என்பவரை காதலியுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். அந்த வழக்கில் ராதாகிருஷ்ணன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன்பு அந்த வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ராதாகிருஷ்ணன், பெங்களூருவில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு வேலைக்குச் செல்வதாக அக்கா வீட்டில் கூறிவிட்டு வந்துள்ளார். அதன் பிறகு தற்போது அவர் செஞ்சி கோட்டை அருகே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த செஞ்சி போலீசார், அவரதுதற்கொலை குறித்து மேலும் விசாரணை நடத்திவருகிறார்கள். செஞ்சி கோட்டை அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் காதலியின் கணவரைக் கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் செஞ்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

love affair senchi
இதையும் படியுங்கள்
Subscribe