/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sanka33.jpg)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் உடனடியாக, சென்னை ராஜீவ்காந்தி அரசுபொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நலமுடன் உள்ளார். என்.சங்கரய்யாவுக்கு இரண்டு தினங்களாக லேசான காய்ச்சல் இருந்த காரணத்தினால் அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இன்று (08/01/2022) மதியம் அவருக்கு அவருக்கு கரோனா பாசிட்டிவ் என தெரிய வந்தது. அவரை உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு ஆக்ஸிஜன் லெவல் மற்ற அனைத்தும் வழக்கம் போலவே உள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவமனை டீன் தேரணிராஜன் மற்றும் மருத்துவர்கள் குழு அவரை தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.
அவரை கவனித்துக் கொள்ள தனி மருத்துவ குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்புகொண்டு தெரிவித்தார். என்.சங்கரய்யா உடல் நலம் குறித்தும் கேட்டு அறிந்தார். அவருக்கு விவரங்களை தெரிவித்துள்ளேன். மேலும் சிறப்பு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தமைக்குநன்றியும் தெரிவித்துள்ளேன்." இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)