மூத்த பத்திரிகையாளர் சின்னகுத்தூசி அய்யாஅவர்களின்பிறந்தநாள் 8 ஆம்ஆண்டு நினைவு விருது வழங்கும் விழா இன்று சென்னை முத்தமிழ் பேரவை திருவாடுதுறை தி.என்.ராஜரத்தினம் கலையரங்கத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் வரவேற்புரையாற்றினார். விழாவிற்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சௌந்தரபாண்டியன்தலைமை வகித்தார். அதேபோல் திராவிட இயக்க ஆய்வாளர், எழுத்தாளர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார்.
சின்னகுத்தூசி நினைவுஅறக்கட்டளைசார்பில்சிறந்த கட்டுரைகளுக்கானவிருதுகளை வழங்கி சிறப்புரையாற்றிகவிப்பேரரசு வைரமுத்து சிறப்பித்தார். நக்கீரன் மற்றும் புனே ஸ்ரீ பாலாஜி சொசைட்டி கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய கவிதை போட்டியில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் புனே ஸ்ரீபாலாஜி சொசைட்டி கல்வி நிறுவன தலைவர்கர்னல் டாக்டர்பாலசுப்பிரமணியன் ஆகியோர்கலந்துகொண்டனர்.