Advertisment

பற்றி எரிந்த தீ... பழி வாங்கிய பீடி

senior citizon fire incident in trichy srirangam 

Advertisment

திருச்சியில்புகை பிடிக்க பற்ற வைத்த நெருப்பில்முதியவர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் கீதாபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு (வயது 80). சம்பவத்தன்று வீட்டில் தனது படுக்கை அறையில் உள்ள படுக்கையில் அமர்ந்தவாறு பீடியை பற்ற வைத்து புகை பிடித்துக் கொண்டு இருந்தார். அப்போது அந்த பீடியில்இருந்த தீ அவர் அமர்ந்து இருந்த படுகையில் உள்ள போர்வையில் பட்டு தீ பிடித்தது. சிறிது நேரத்தில் போர்வையில் பிடித்த தீ தங்கவேல் உடல் முழுவதும் பரவி தீ காயம் அடைந்தார்.

பலத்த தீ காயமடைந்த நிலையில் தங்கவேலு திருவரங்கம் அரசு மருத்துவமனையில் உள்ள தீக்காயப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த தங்கவேலு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

fire trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe